Jesus Comes (Tamil)

016 Kani Tharum Kaalam andro | by Daddy. D. John Rabindranath


Listen Later

கனிதரும் காலமன்றோ தேவா நான்

கனியற்ற பாழ் மரம் மூவா

ஆண்டவர் யேசுவின் கிருபையினால் அன்றோ  

உன்னத கனிகளைப் பெற்றிடுவேன்


1. அழுகின கனியாய் மாறின யூதாஸ்  

அன்பராம் இயேசுவை காட்டியே கொடுத்தான்

அதிசய அன்பினை உதறியதாலே

அநீதியின் கூலியால் அழிந்துவிட்டான் - கனி


2. கொத்தின கனியாய் மாறின பேதுரு

குற்றமில்லாத தன் தேவனை சபித்தான்

கிறிஸ்துவின் கண்களில் கனிந்த நற்பார்வையால்

கருத்துடன் கர்த்தரை கண்டடைந்தான் - கனி


3. பூரண கனியாம் யோவானைப் போல

பூரண அன்பினால் சாய்வேன் உம்மார்பில்

சிலுவையின் கனிகளைப் பகிர்ந்தளித்து நான்

சிலுவையில் அடைக்கலம் பெற்றிடுவேன் - கனி

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes