Jesus Comes (Tamil)

யாரிடம் செல்வோம் இறைவா


Listen Later

Song by Bro.  D.  John Rabindranath


                யாரிடம்    செல்வோம் இறைவா

                வாழ்வு தரும்  வார்த்தையெல்லாம்

உம்மிடம்  அன்றோ உள்ளன

யாரிடம்  செல்வோம்  இறைவா

இறைவா -  இயேசுவே  ( 2 ) - யாரிடம்.....


1. அலைமோதும் உலகினிலே

ஆறுதல் நிர் தர வேண்டும்

அண்டி வந்தோம்  அடைக்கலம் நீர்

ஆதரித்தே  அரவணைப்பீர்

2. மனதினிலே போராட்டம்

மனிதனையே வாட்டுதைய்யா

குணமதிலே மாறாட்டம்

குவலயம் தான் இணைவதெப்போ

3.   வேரறுந்த  மரங்களிலே

விளைந்திருக்கும் மலர்களைப் போல்

உலகிருக்கும் நிலைகண்டும்

உமது மனம் இரங்காதோ


4. அமைதி  ஒன்றைத் தேடி வந்தேன்

நீர் என்றே உமைத் தொடர்ந்தேன்

பாருலகில்  ஆறுதல் யார்?

நீர்  அன்றேல் என் துணை யார்?


...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes