ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோவின் சிறுகதைகள் உண்மையின் வெகு அருகே நின்று எழுதப்பட்டவை. கதைகள் என்று சொல்லப்பட்டாலும், குறைவான புனைவுடன் உள்ளது உள்ளபடி சொல்பவை. வாசகர்களின் உள்ளத்தை ஊடுருவி நேரடியாகப் பேசுபவை. எனவே கதைகளின் பதற்றத்தை வாசகனுக்குள்ளும் கடத்துபவை.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மனிதர்களின் துயரமாகப் பார்த்தவர் மண்ட்டோ. அவரது கதைகளின் அடிநாதம் இந்தத் துயரமே. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்குப் புலம் பெயர்ந்த மண்ட்டோ, பிரிவினையின் போது நடந்த கலவரங்களாலும் படுகொலைகளாலும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். வெளிப்படையான எழுத்துகளுக்காக பாகிஸ்தான் அரசால் மிரட்டப்பட்டார். தொடர்ந்து இப்படி எழுதினால் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டார். மீள முடியாத துயரில் சிக்குண்டு குடியில் வீழ்ந்து உயிரிழந்தார்.
இத்தனை அலைக்கழிப்பிலும், மண்ட்டோ தன் கதைகளில் பெண்களின் துயரங்கள் குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் குறித்தும், அவர்களது சுதந்திரம் குறித்தும் நிறைய எழுதினார். இதனால் இன்னும் தனித்துவமான எழுத்தாளரானார்.
தன் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டிய வாசகமாக மண்டோ எழுதியது: ‘இங்கே ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ உறங்குகிறான். இத்துடன் அவனது சிறுகதைகளின் கலையும் துயரங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அவன், இரண்டு பேரில் யார் சிறந்த சிறுகதையாளன் என்று ஆச்சரியப்படுகிறான். கடவுளா அல்லது அவனா?’
இதில் உள்ள சிறுகதைகள்:
டோபா டேக் சிங்
மம்மது பாய்
1919ல் இது நடந்தது
அவமானம்
இட்ட வேலை
இறுதி சல்யூட்
இறைவன் மீது ஆணை
கருப்பு சல்வார்
காட்டுக் கற்றாழை
சிராஜ்
சுதந்திரத்தின் விலை
டெல்லிப் பெண்
திற...
தீர்க்கதரிசி
தோழன்
நூறு வாட் பல்பு
பத்து ரூபாய்
போர் நாய்
மொஸெல்
சில்லிட்ட இறைச்சி
எழுத்தாளர் ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ எழுதி பென்னேசன் மொழிபெயர்த்து சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Author:
Saddath Hassan Mantto
Narrator:
Sukanya Karunakaran
Publisher:
Itsdiff Entertainment