SHANMUGATHIRUKUMARAN

ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்-முனைவர்.சண்முகதிருக்குமரன்


Listen Later

ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்-முனைவர்.சண்முகதிருக்குமரன்

இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன்,

உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர்
முடிவு செய்து கொள்கிறார்கள்.

50 வயதுக்குப் பிறகு தான் ஒரு

பலமான, வளமான  மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...

பல விஷயங்களில் அனுபவப்பட்டு,

தெளிந்து, வாழ்க்கையைப் புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!

வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி

குறைந்து போகும்.

இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம்

நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்.

புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான,

உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்.

உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்

கொள்ள கடினமான இலக்கை  முன்னிலைப்படுத்தி அதனை
நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு  செல்லுங்கள்.

எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள்,

புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு

உட்கார்ந்து முதியோர் அரங்கம்  உருவாக்காதீர்கள்...

“இளைஞர்களோடு பழகுங்கள்.

25 வயதில் இருந்த உத்வேகம்  அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...”

*அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு

செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும்அழகு தான்...*

உலகின் மிகப் பெரிய சாதனைகளைச்

செய்தவர்கள்,  நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில்
50+ காரர்கள் தான் அதிகம்..!!!

பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த

கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...

 

வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்.

திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக்
குதிக்க வைக்கும்...

...more
View all episodesView all episodes
Download on the App Store

SHANMUGATHIRUKUMARANBy SHANMUGATHIRUKUMARAN