Solratha sollitom| Hello Vikatan

அமெரிக்காவில் எதிர்ப்பைச் சந்தித்த மோடி! | Solratha Sollitom-23/06/2023


Listen Later

* கோவை முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்

* வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி கூறியதாவது:- “இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமில்லை இயற்கையை சுரண்ட விரும்பவில்லை; சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம்” என்று கூறினார்.

* முன்னதாக இந்த விருந்தில் கலந்து கொள்ள மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா , கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை , அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ , பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, Adobe இன் CEO சாந்தனு நாராயண், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், Zerodha இணை நிறுவனர் நிகில் காமத். இந்திய-அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் எம். நைட் ஷியாமலன் , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பெப்சிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி, முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் வெள்ளை மாளிகைக்கு அரசு விருந்துக்கு வந்திருந்தனர்.

* அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணிக்கப் போவதாக அந்நாட்டின் இரண்டு பெண் எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி:- நீங்கள் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் உணர்விலும், ரத்தத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் சுவாசத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகமே உள்ளது. ஜனநாயகத்திற்காக நாங்கள் வாழும்போது பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மனித உரிமைகளும், மனிதத்திற்கான மதிப்பும் இல்லையென்றால் ஜனநாயகம் அங்கு இருக்க முடியாது. அனைத்து சிறுபான்மையினருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களும், வசதிகளும் மத, சாதி, இடம் போன்ற எந்த பேதமுமின்றி எளிதாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்திருக்கிறார்.

* இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ``ஒருவேளை நான் பிரதமர் மோடியிடம் உரையாடியிருந்தால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லையென்றால், இந்தியா பிளவுபட வாய்ப்பிருக்கிறது என்று அவரிடம் கூறியிருப்பேன்" என ஊடக பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

* தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை மனு தாக்கல் செய்துள்ளார்.

* அமித் ஷா பேசுகையில், "பீகார் மாநிலம் பாட்னாவில் தற்போது போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாட்னாவில் கூடியிருப்பவர்கள் பிரதமர் மோடியையும் தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 2024ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராவார். வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் பிடித்து பெரிய வெற்றியை பெறும்." இவ்வாறு அவர் பேசினார்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan