Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க மாநாட்டைச் சீர்குலைக்க சதி செய்கிறாரா உதயநிதி? | Solratha Sollitom-16/08/2023


Listen Later

* 2018-ல் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் அன்றைய மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக 'பாசிச பா.ஜ.க. ஒழிக' என முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்ட இளம்பெண் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

* நீட் ரத்தை வலியுறுத்தி திமுக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி ஆகியவை இணைந்து உண்ணாவிரதம்

* "அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்துள்ளனர். இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

* பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

* 82% இந்துக்களைக் கொண்ட இந்தியா இந்துதேசம்தான் - மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத். இந்தியா அனைவருக்குமான நாடு. இந்துதேசம் பற்றிப் பேசுபவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் - திக்விஜய்சிங்

* அடுத்த சுதந்திரதினத்திலும் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவேன். அடுத்த ஐந்தாண்டுகள் வளர்ச்சியின் காலமாக இருக்கும். 2047ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவாக இருக்கும் - மோடி

ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பிரதமர் கூறுகிறார். கடந்த பத்தாண்டுகளாக அவர்தானே பிரதமராக இருந்தார்? - கபில்சிபில்

* அஜித் யாரு என்று கேட்ட துரைமுருகன்

* நேருவின் பாரம்பரியத்தை மாற்றுதல், சிதைத்தல், அவதூறு செய்தல், அழித்தல் என்ற ஒற்றை நோக்கத்துடனேயே பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்பது ‘பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

-Solratha Sollitom

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan