Solratha sollitom| Hello Vikatan

அடுத்த சிக்கலில் பன்னீர்...'ஆபாச' புகாரில் ரவீந்திரநாத்! | Solratha Sollitom-02/08/2023


Listen Later

* மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறையிட்டனர். 

* செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4% மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். 6@ இணைப்பேராசிரியர்கள்

* "இஸ்லாமியர்களை அவமதித்ததாக நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் ஓட்டு போடுவார்களா?" - சீமான்

* நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு, பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகார்.


-Solratha Sollitom.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan