Solratha sollitom| Hello Vikatan

செந்தில் பாலாஜி, பொன்முடி....அடுத்த குறி அனிதா ராதாகிருஷ்ணனா? | Solratha Sollitom-19/07/2023


Listen Later

* நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற உள்ள சூழலில், இதில், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டு உள்ளன. 

* கணவனுக்கு பாதபூஜை செய்த பிரணிதா

* அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் முதல்-அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார். 

* சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயணம் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமாக அமைந்தது. இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதசார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் நலன் இவையாவும் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வாதிகாரம், ஒற்றை தன்மை ஏதேச்சதிகாரம், அதிகார குவியலில் சிக்கி இந்த நாடே சிதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் அப்படிப்பட்ட பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இருக்கிறது. 

* அசாம் முதல்வரும், பா.ஜ.க., தலைவருமான ஹிமந்த பிஸ்வா ஷர்மா தனது டுவிட்டரில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். “ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள்"

* "இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு மட்டும்தான். பா.ஜ.க கூட்டணியில் நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். தி.மு.கதான் அடிமையாக இருக்கிறது" - எடப்பாடி

* மகாராஷ்டிரா மாநில பாஜக சமூக ஊடக மற்றும் சட்ட ஆலோசனைத் துறை தலைவர் அசுதோஷ் துபே என்பவர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (யுபிஏ), இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்று மறுபெயரிட்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக நாட்டின் பெயரை, அவர்கள் வெறும் கருவியாகப் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, தங்களது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாட்டின் பெயரை முன்னிறுத்தும் சுரண்டல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இவர்களது நடவடிக்கை நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாக கருதுகிறேன். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை உருவாக்கவும் உரிமை உண்டு. ஆனால் நாட்டின் கண்ணியம் மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைத்து மதிப்பிடும் வகையில் செயல்படக் கூடாது. எதிர்காலத்தில் இவர்களது கூட்டணி வெற்றி பெற்றால், ‘இந்தியா வென்றது’ என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் அவர்களது கூட்டணி தோற்றால், ‘இந்தியா தோற்றுவிட்டது’ என்று மக்கள் சொல்வார்கள். இதுபோன்ற பிரசாரங்கள், நாட்டை அவமதிக்கும் உணர்வை ஊக்குவிக்கும். எனவே இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து, அரசியல் கட்சிகள் தங்களது கட்சி மற்றும் கூட்டணியின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, உரிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

* பா.ஜ‌.க மாநில மகளிரணிச் செயலாளர் மோகனபிரியா, நேற்று மாலை ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `மக்கள் யாரும் 4, 5 நாள்களுக்குத் தக்காளியை வாங்காமல் இருந்தால், விலை தானாகக் குறையும்' என பா‌.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா சொல்லியிருப்பது குறித்து தங்களின் கருத்து என்ன என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த மோகனபிரியா, ``தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஹெச்.ராஜா கூறியிருப்பது, அவரின் தனிப்பட்ட கருத்து" எனத் தெரிவித்தார். உடனே அவர் அருகில் அமர்ந்திருந்த பா.ஜ.க-வினர் அவரை அழைத்து ஏதோ பேச, ``இது ஹெச்.ராஜாவின் தனிப்பட்ட கருத்து என்று சொல்ல முடியாது. தக்காளி விலை, வெங்காயம் விலையைக் குறைக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின், பெங்களூரில் உட்கார்ந்துகொண்டு பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan