Solratha sollitom| Hello Vikatan

சிறைக்குப்போன செந்தில்பாலாஜி, அடுத்து பொன்முடியா? | Solratha Sollitom - 17/07/2023


Listen Later

* சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

* முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- வணக்கம் கர்நாடகா! பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூருவில் கூடியிருக்கிறோம். இந்த முக்கியமான தருணத்தில், பாஜகவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம். பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு, கர்நாடகாவின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் ஒரு சக்திவாய்ந்த உதாரணம். இதை தேசிய அளவில் பிரதிபலிப்போம்.

”பாஜகவுக்கு எங்கள் நடவடிக்கை எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கம் போல எங்கள் மீதும் அமலாக்கத்துறையை ஏவியிருக்கிறார்கள். இது பற்றி எல்லாம் கடுகளவு கூட அஞ்சப்போவதில்லை. பொன்முடி மீதான வழக்கு ஜெயலலிதா போட்ட வழக்கு. இந்த வழக்கு பதியப்பட்ட பின்னர் 10 ஆண்டுகாலம் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆதாரமில்லாத வழக்கு அதனால்தான் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது பாஜகவின் ஏவல் துறையான அமலாக்கத்துறையை ஏவியிருக்கிறார்கள். பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதுதான் நோக்கம். பாஜகவை வீழ்த்துவதில் உறுதியாக உள்ளோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* 11 பேர் மீதான குட்கா வழக்கு: 11 மாதமாக கிடப்பு: 11வது முறை வாய்தா: ஆக.,11க்கு ஒத்திவைப்பு...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் மீது குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி தராததால், 11 மாதங்களாக கிடப்பில் இருப்பதால், நீதிமன்றத்தில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கோரியது. இதனையடுத்து ஆக.,11ம் தேதிக்கு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

* ''ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், பெண்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர்,'' என, ஐ.ஐ.டி.,யின் முதல் பெண் இயக்குனர் ப்ரீத்தி அகாலயம் தெரிவித்து உள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் சான்சிபார் என்ற இடத்தில், சென்னை ஐ.ஐ.டி., முதன்முறையாக அதன் வளாகத்தை அமைக்கிறது. சான்சிபார் ஐ.ஐ.டி., இயக்குனராக, சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் மாணவியும், பேராசிரியையுமான ப்ரீத்தி அகாலயம், 49, சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். ஐ.ஐ.டி.,க்கு பெண் இயக்குனர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.

* எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, ராகுல் காந்தி பெங்களூருவுக்கு வந்தனர். காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று மாலை சோனியா காந்தி தேநீர் விடுத்து அளிக்க உள்ளார்.

* மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லி அரசு தாக்கல் செய்த வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.

* அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan