Solratha sollitom| Hello Vikatan

DMK Files VS Annamalai Files | மோசடி புகாரில் சிக்கி, தி.மு.க ஊழல் புகாரை வெளியிடும் அண்ணாமலை! | Solratha Sollitom-13/04/2023


Listen Later

DMK Files VS Annamalai Files

மோசடி புகாரில் சிக்கி, தி.மு.க ஊழல் புகாரை வெளியிடும் அண்ணாமலை!

Description : 

* தி.மு.க.வின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு

* 'பணம் உள்ளவர்களுக்குத்தான் பா.ஜ.க.வில் பொறுப்பு' - பா.ஜ.க.வில் இருந்து விலகிய பொருளாதாரப் பிரிவு மாநிலச்செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு குற்றச்சாட்டு

* மெரினா லூப் சாலையில் மீன்கடைகள் அகற்றம் - மீனவர்கள் எதிர்ப்பு

* தமிழ் மொழியைவிட இந்தி பழமையான மொழி கிடையாது. தமிழின் மீது இந்தியைத் திணிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி

* "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். " என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ரோசனை காவல் நிலையத்தில் இன்று மதியம் புகார் அளித்துள்ளார்.

* "சட்டசபையில் அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை" - ஸ்டாலின்

* சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைதுசெய்தனர்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan