Jesus Comes (Tamil)

ஏழைகளின் அடைக்கலமே


Listen Later

பால்ராஜ் மோசஸ் பாடல்


ஏழைகளின் அடைக்கலமே 

திக்கற்றோரின் ஜெய பெலமே

அனாதையை ஆதரிக்கும் இயேசு தெய்வமே

அனாதைகளை ஆதரிக்கும் இயேசு தெய்வமே


இயேசு நல்லவர் போதுமானவர்…• 

என்னை நேசிக்கும் கர்த்தர் அவர் - 2

என் தேவை எல்லாம் தினம் தருகின்ற

என்னை விசாரிக்கும் தேவனவர் - 2



1) மனதின் வேதனையோ பல சோதனையோ

பணக் கஷ்டத்தால் தவிக்கின்றாயோ - 2

வியாதி படுக்கையிலும் நோக்கி கூப்பிட்டு பார்

அவர் அற்புதம் செய்திடுவார் - 2 - ஏழைகளின்


2) பெற்றோர் இன ஜந்துக்கள் உற்றார் உறவினர்கள்

நீ நம்பினோர் கைவிட்டாலோ   -  2

வாக்கு மாறா இயேசு உன்னருகிலுண்டு

நீ கலங்கி சோர்ந்திடாதே - 2 - ஏழைகளின்


3) என் ஆயுசின் தினம் முழுவதும்

அவர் நாமத்தின் மகிமைக்காக  -  2

ஒரு சிறு திரிபோலெரிந்து மறைந்திடுவேன்

அவர் பாதத்தில் இளைப்பாறுவேன் -2 - ஏழைகளின்


...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes