Jc Vivekraja.R

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் - புத்தக திறனாய்வு ! Part-2 அத்தியாயங்கள் 7 & 8. By : சுய சிற்பி.


Listen Later

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் - புத்தக திறனாய்வு !
அத்தியாயங்கள் 7 & 8.
By : சுய சிற்பி. ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️புத்தகம் பற்றிய சிறு குறிப்பு: 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால்
ஆம்.
அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும் கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது?
இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது?
அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன?
இதெல்லாம் குரு பார்வை, சனி பார்சை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்!
ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்த கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்!
இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.
உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்."" 👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏👌👏
...more
View all episodesView all episodes
Download on the App Store

Jc Vivekraja.RBy Jc Vivek Raja.R