"எப்படி இருக்கீங்க?" இந்த மிகச்சாதாரண கேள்விக்குக் கூட, கேட்பவரைப் பொறுத்து நம் பதில் மாறக்கூடும்.. எல்லாரோடும் எல்லாவற்றையும் மனம் விட்டுப் பேச அனைவராலும் இயலாது.. அப்படி பேசிப் பகிர முயன்றாலும், தொடங்கிய வரியை முடிப்பதற்குள் நம் எண்ணங்கள் மாறிடக் கூடும்.. இந்த நிலையற்ற மனதை, அதன் இயல்பை எதிர்மறையாகவே சித்தரித்து பழகிவிட்டோம்.. ஆனால், அதிலும் நன்மை காண சில சிந்தனையாளர்கள் பழகுகிறார்கள்.. vaultboy என்பவரின் "Everything Sucks" என்ற ஆங்கிலப் பாடலைத் தழுவி இந்தப் பாடலை எழுதி பாடி இருக்கிறேன்; தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..நன்றி.