இந்திய கல்வி போராளிகள் - ஆயிஷா .இரா .நடராசன் அத்தியாயம் -12-கோபால கிருஷ்ண கோகலே
ஆயிஷா இரா. நடராசன் எழுதியுள்ள ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ எனும் இந்நூலில் பல அக்காலக் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றனர்.
இவர்களில் பலர் ‘கல்வியாளர்களே அறிந்திடாத ஆளுமைகள்’ என்கிறார் முன்னுரையில் கல்வியாளர் ச.சீ. ராஜகோபாலன். கல்வியாளர்கள் சமூக சீர்திருத்தவாதிகளாக இருப்பது இயற்கையானது என்றும் அவர்களது தன்னலமற்ற ஈடுபாடே இந்தியாவின் கல்விக் கண்ணைத் திறந்தது, என்றும் சொல்கிறார். விரிந்த தேடல், கடின உழைப்பின் மூலம் இவ்வளவு மறைக்கப்பட்ட கல்வியாளர்களான இந்தியக் கல்வித் தூண்களை மீட்டெடுத்து உலகறியச் செய்ததைப் பாராட்ட வேண்டும்.
இன்று பெண்கல்விக்காக துப்பாக்கிகளை எதிர்கொண்ட மலாலாவை அனைக்கும் தெரியும். ஏனெனில் அது இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியது. ஆனால் 1848 யிலேயே இந்து அடைப்படைவாதத்தை தனது கணவர் ஜோதிராவ் புலே உடன் எதிர்கொண்டு வென்றவர் இவர். பெண்கல்விக்கு எதிராக அழுகிய முட்டை, சாணி, மல வீச்சுக்கு இலக்கான வீரப் பெண்மணி. இந்தியக் கல்வி தொடர்பான நமது பாடநூல்களில் காணப்படாத ஒரு பெயராகவே சாவித்ரிபா புலே இன்றும் இருக்கிறார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஆஸ்திரியாவில் ஹிட்லரின் வதைமுகாமில் 200 குழந்தைகளுடன் மாண்டுபோன ஜோஹன் கோர்சாக் ஐப் போல குழந்தைகள் மற்றும் கல்விக்காக உயிர் துறந்தவர் சாவித்ரி பா புலே. இவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, அன்று கைவிடப்பட்ட நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட குழந்தைகளைக் கவனித்துக் கொண்டதால் அந்நோய் தாக்கி மாண்டு போனார்.
கல்விப் போராளிகள் பலரது கதை இம்மாதிரியான இன்னல்கள் பலவற்றைக் கொண்டது. இவர்களை பெயர் சொல்லி அறிமுகம் செய்யாமல் அவர்களது சிறப்புகளைத் தலைப்புகளாக்கியுள்ளார். (எ.கா. அய்யன்காளி – தலித் மக்களின் கல்வி நாயகர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி –ஆதரவற்றவர்களுக்கு ஆதாரக் கல்வி தந்த தமிழ் வேங்கை)
To buy this book onlinne visit:
https://www.commonfolks.in/books/d/india-kalvi-poraaligal
INTERESTING PLAYLISTS OF #KuttiStory:
#InspirationalWomen : பல துறைகளில் சாதனை படைத்த பெண்களின் சாகசக் கதைகள் : https://www.youtube.com/watch?v=2Ii6gRlcl84&list=PLaummWSQZfokY4-tdUOjHkGXT6KiOFt3e
#FirstWomanDoctors :
பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலத்தில், பல தடைகளைத் தாண்டி முதன்முதலில் பல்வேறு பெண்கள் எப்படி மருத்துவர் ஆனார்கள் என்கிற சாகசக் கதைகள் : https://www.youtube.com/playlist?list=PLaummWSQZfolrOl5yhrX_PkHZmwJXSX8R
#வாசிக்கலாம்வாங்க கதைகள் :
https://www.youtube.com/playlist?list=PLaummWSQZfok_enbHRxfBQ-Jukz2x6b-9