Tamil Audio Books

இந்தியா முழுவதும் இதனால் நல்ல பலன் பெற முடியும்


Listen Later

http://aurality.app - download free audio platform
ராம்நாத் இப்போது அருகே இல்லாதது குறையாகப் பட்டது. அவர் போகுமுன் தனக்குக் கொடுத்து விட்டுப் போன தகவல் சாதாரணமானதல்ல. இந்தத் தகவலை அவர் எப்படியாவது உறுதிப்படுத்தவேண்டும். உறுதிப்படுத்தினால் முகம்மது அலி ஜின்னாவை சர்ச்சிலால் எளிதாக மடக்கி அடக்க முடியும். சர்ச்சில் ஒருவேளை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதம் செய்தால் சர்ச்சிலின் எதிரி லேபர் தலைவரும் துணைப் பிரதமருமான அட்லியை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தியா மேல் கருணை உள்ள அட்லி இதனைச் சரியாகப் பயன்படுத்துவார்.
விஷயம் சாதகமாக பிரிட்டிஷ் தேசம் பக்கம் இருக்கும் வரை டோரிஸ் உறுப்பினர்களும் அட்லிக்கு உதவுவார்கள். சர்ச்சிலுக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும். இங்கிலாந்து மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதனால் நல்ல பலன் பெற முடியும். முடிந்தால் ராஜாஜியை நாம் அழைத்துப் பேச வேண்டும். அவராலும் சில யோசனைகளைத் தரமுடியும். நல்ல காலம். யுத்த காலத்தில் சுதந்திரப் போராட்டம் செய்வதால் எந்தவிதப் பலனும் இல்லை என்று பகிரங்கமாகவும் நேர்மையாகவும் அறிவித்த ராஜாஜி அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது எத்தனை நல்லதாகப் போயிற்று... ராமநாதனின் உறுதிப்படுத்தலுக்குப் பின் வின்ஸ்டன் சர்ச்சில் தாம் இந்த முறை சொல்வதைக் கேட்க வேண்டும். முகமது அலி ஜின்னாவை தன் கட்டுக்குள் கொண்டு வரத்தான் வேண்டும். ஆனால் ராம்நாத் உறுதிப்படுத்த வேண்டுமே.. வேவல் ஒரு மிகச் சிறந்த ராணுவ வீரர். அவரால்தான் இந்த மகா யுத்தத்தின் முதல் வெற்றியை பிரிட்டிஷ் பெறமுடிந்தது. வட ஆப்பிரிக்காவில் இத்தாலியரையும் கிரேக்கவீரர்களையும் துரத்தித் துரத்தி அடித்தவர் வேவல். அப்படிப்பட்டவர் தன் வீரவாழ்க்கையில் படுதோல்வியையும் சந்தித்தவர்தான். அவர் கண் முன்னே சிங்கப்பூரும் மலேயாவும் ஜப்பானியர்கள் கைப்பற்றியபோதுதான் ஒரு சிப்பாய் எனும் முறையில் அவர் மனம் வலித்தது. பர்மாவில் ஜப்பானியர்கள் நுழைந்துவிட்டதையும் தடுக்க முடியவில்லை. ரங்கூனில் ஜப்பானியர்கள் நம்மைத் தாக்க எல்லைக்கு மிக அருகே வந்துவிட்டார்கள்.. தான் பிறந்த நாட்டுக்கு, இந்த யுத்தத்தில் தோல்வியே அதிகம் பெற்ற அதே சமயத்தில் முதல் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தவன் என்கிற நன்றி உணர்ச்சியே இல்லாமல் தங்கள் தேசப் படைகள் ஆப்பிரிக்காவில் வெற்றி மேல் வெற்றி தந்து முன்னேறும்போது எல்லாவற்றையும் தடுத்துத் தன்னை இந்தியாவுக்குப் பதவி உயர்வு கொடுத்து படைப் பலத்தைப் பெருக்காமல் அனுப்பி வைத்த புண்ணியம் சர்ச்சிலுக்கே உண்டு. ஆனால் இதை வின்ஸ்ட்டன் சர்ச்சில் தனக்கும் தன் வறட்டு கௌரவத்துக்கும் சாதகமாகப் பயன் படுத்திக்கொண்டதுதான் வேவலுக்கு மிக அதிகமாக வலித்தது. அரசியல்வாதிக்கும் சிப்பாய்க்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டில் அரசியல்வாதிக்கு வெற்றிதான். ஆர்நால்டைப் பார்த்து ஒரு புன்னகை செய்தவாறே வைஸ்ராய் பேசினார். ‘சரி, இந்த விஷயத்தைச் சற்று ஆறப் போடுவோம். செயலாளர் லியோ ஆம்ரிக்கு ஒரு கேபிள் கொடுத்து அவரிடம் நான் பேச அனுமதி வாங்கிக் கொள். நாளையோ அடுத்த நாளோ அவர் எப்போது பேசுகிறாரோ அப்போது அவரிடம் கேட்டு விட்டு ஒரு முடிவுக்கு வருவோம். அத்துடன் இவன் கொடுக்கும் கட்டளை நமக்கு நேரிடையாக வரவில்லை. நேரடியாக லண்டனிடமிருந்து தகவல் வரும் வரை நாம் காத்திருப்பதில் தவறில்லை.” உதவியாளன் இன்னொரு முக்கிய கோப்பையும் அவர் முன் வைத்தான். அது கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் மட்டுமில்லாமல் இந்திய அதிகாரிகள் அலுவலர்கள் அனைவருக்கும் சம்பளம் போடப்படாத நிலை பற்றிய கோரிக்கை கோப்பு. இதை இவருக்கு முன்னர் இருந்த கவர்னர் ஜெனரல் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டு விட்டு லண்டன் சென்று விட்டதால் பொறுப்பு தம் மேல் சுமையாக சுமந்து தாங்கமுடியாமல் இருப்பதும் தெரியும். உண்மை நிலவரப்படி இந்த யுத்த காலமாக இருந்தாலும் தம் அரசாங்கத்துக்கு கடந்த ஆண்டு வருவாய் போதுமானதாகவே இருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் கிழக்கு ஆசியாவிலும் உள்ள பிரிட்டிஷ் படைகளுக்கு இந்தியாதான் பண உதவி செய்து வருகிறது. கூட்டுப் படை வீர்ர்களின் சம்பளமே சரியாகப் போகிறது. அத்துடன் அதிக வரி வசூலுல் செய்ய முடியாத உள்நாட்டு நிலையில் ஏற்றுமதியும் இறக்குமதி வரிவசூலும் ஏராளமாக குறைந்து விட்டபடியால் பிரிட்டிஷ் இந்தியாவில் விலையேற்றம் அதிகமாக உள்நாட்டுப் பணப் பற்றாக்குறையால் அரசாங்கமே தத்தளித்து தவித்தது. பாம்பே கவர்னர் இரண்டு நாட்கள் முன் பேசியபோது கூட இது விஷயத்தில் கவலைகளைப் பகிர்ந்துகொண்டாரே.. இதுவரை இங்கு ஆண்டுகொண்டிருந்த கவர்னர் ஜெனரல்களுக்கு இம்மாதிரியான சோதனைகள் வரவில்லை. முதலாம் உலகப் போரின்போது அந்த யுத்தத்தின் சுவடே தெரியாமல் இந்தியாவிலிருந்து ஏராளமான ஏற்றுமதிகள் இங்கிலாந்தைக் காப்பாற்றின. ஆனால் இம்முறை அப்படி இல்லை.
...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Audio BooksBy tamilaudiobooks

  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5

4.5

24 ratings


More shows like Tamil Audio Books

View all
Kadhai Osai - Tamil Audiobooks by Deepika Arun

Kadhai Osai - Tamil Audiobooks

61 Listeners

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories by Raa Raa

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories

12 Listeners

Tamil Amudhu by R.Ramalingam

Tamil Amudhu

0 Listeners