"உலகத்தில் தினசரி கண்ணில் படும் கொடுங்காட்சிகளை அடிக்கடி பார்த்து உள்ளத்தின் உணர்ச்சிகள் கூர்மை மங்கிப் போயிருந்தால்,சித்தார்த்தர் மனம் பிறகு அவ்வளவு பாடு பட்டிராது. அப்பொழுதுதான் மலர்ந்த மொக்கின் ஹ்ருதயம் போல, அவர் ஹ்ருதயம் சதா காற்றுப் படாது புத்தம் புதிதாகவே இருந்ததால் அதன் மூச்சே அதைப் புடைத்து தொட்டாற் சிணுங்கியைப் போலச் சுருங்கச் செய்தது."