இரசாயனவியல் (Chemistry) எனப்படுவது அணுக்களால் அதாவது தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் சேர்மங்களைப் பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். பொதுவாக அணுக்களின் இணை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய அனைத்து செய்திகளும் இத்துறையில் ஆராயப்படும். அணுக்களும் மூலக்கூறுகளும் இரசாயனப் பிணைப்புகளிலாகின்றன என்பது இங்கு விவரிக்கப்படுகிறது .பல வகையான பிணைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும். அதை காதல் பிணைப்பாக மாற்றம் செய்தால் எப்படி இருக்கும்? கேட்போமா!