Sign up to save your podcasts
Or
* மதுரை ரயிலில் தீ விபத்து
* கடந்த சில நாட்களாக மெட்ரோ ரெயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல், "புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. - எடப்பாடி பழனிசாமி
* மோடி, சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பெயர் வைத்தார். பு இந்நிலையில், நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென மத அமைப்பான அனைத்திந்திய இந்து மகாசபா தேசிய தலைவர் சக்ரபனி மகாராஜ் தெரிவித்தார்.
* கர்நாடகாவில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்கியதில் சுகாதார துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
* 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று, இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது. எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
* இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
* சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
-Solratha Sollitom