
Sign up to save your podcasts
Or


நடக்காததை நடந்தது போல் காட்டும்
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்
இருப்பை வைத்தே இயங்கி நிற்கும்
அநாதி காலமாய் ஆழிமழை பொழியும்
ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய்
மாயை என்பதே மாயை எனஅறிவாய்
எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!
சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்!
By atmanandalahariநடக்காததை நடந்தது போல் காட்டும்
இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும்
கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்
இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும்
ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும்
இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும்
ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்
இருப்பை வைத்தே இயங்கி நிற்கும்
அநாதி காலமாய் ஆழிமழை பொழியும்
ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய்
மாயை என்பதே மாயை எனஅறிவாய்
எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!
சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்!