Karthik Nilagiri - Beyond Visuals

கேப்டன் மார்வெல் - ஒரு சாதாரணப் பெண்


Listen Later

Avengers Captain Marvel இந்த திரைப்படத்தின் கதை ஹலா என்ற கிரகத்தில் வசிக்கும் கெரோல் டென்வெர்ஸ் என்பவருக்கு அவரது கடந்தகாலம் பற்றிய எந்த நினைவும் இல்லை. அடிக்கடி கனவுகளில் தன் கடந்தகாலம் பற்றிய அரைகுறை நினைவுகளை மட்டுமே காண்கிறார். அதே கிரகத்தில் வசிக்கும் கிரீ என்ற இனத்தின் உயரதிகாரியான யோன்-ரோக் என்பவர் சக்திகளை கட்டுப்படுத்துவது குறித்து வெர்ஸுக்கு பயிற்சி அளிக்கிறார்.
கிரீ இனத்தின் முதன்மை எதிரிகளான இஸ்க்ரல் என்ற இனத்தினரை தாக்க யோன்-ரோக் தலைமையில் ஒரு கூட்டம் செல்கிறது. அதில் வெர்ஸும் அடங்கும். அந்த தாக்குதலில் இஸ்க்ரல்கள் வெர்ஸை கடத்தி சென்று விடுகிறனர். அவருடைய கடந்தகால நினைவுகளிலிருந்து ஏதோ ஒரு விஷயத்தை திருட முயற்சிக்கும் இஸ்க்ரல்களிடமிருந்து தப்பிச்சு ஒரு சிறிய விண்கலத்தை பிடித்து வெர்ஸ் பூமிக்கு வருகிறார். பின்னர் அங்கு ஷில்ட் ஏஜண்ட் குழுவில் பணிபுரியும் நிக் ப்யூரி என்பவரை சந்திக்கும் வெர்ஸ் தன்னை ஏன் இஸ்க்ரல் இனம் துரத்துகிறது? தன்னுடைய கடந்த காலத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன? தனக்கு மீநாயகன் சக்தி எப்படி கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் வெர்ஸ் தேடும் விடைதான் கேப்டன் மார்வெல் என்ற திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் எனக்கு பிடித்த காட்சியைப் பற்றிய podcast இது.
...more
View all episodesView all episodes
Download on the App Store

Karthik Nilagiri - Beyond VisualsBy Karthik Nilagiri