The Salary Account | Hello Vikatan

கிரெடிட் கார்டின் இந்த விஷயங்களை சரியாக கவனிக்கிறீர்களா?


Listen Later

நம் நாட்டில் Buy Now, Pay Later (BNPL) போல நவீனமான ஷார்ட் ஃபைனான்சிங் ஆப்ஷன்கள் வந்துவிட்டாலும்கூட, இன்னும் கிரெடிட் கார்டுகளுக்கான மவுசு கொஞ்சமும் குறையவில்லை. இன்றைய நுகர்வு கலாசாரத்தில் கிரெடிட் கார்டு என்பது சம்பள தாரர்களின் தவிர்க்கமுடியாத ஒரு Financial Instrument எனலாம். உங்களில் பலருமேகூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி வைத்திருக்கலாம். பல வங்கிகள் அக்கவுன்ட் ஓப்பன் செய்யும்போதே இலவசமாக கிரெடிட் கார்டுகளை வழங்கிவிடுகின்றன. சில வங்கிகள் விழாக்காலங்களில் சிறப்பு சலுகைகள் மூலம் கிரெடிட் கார்டுகளை விற்கின்றன. இப்படி அக்கவுன்ட் ஓப்பன் செய்யும்போதோ அல்லது சுயமாக விண்ணப்பித்தோ என எந்த வகையில் வேண்டுமானாலும் நீங்கள் கிரெடிட் கார்டுகளைப் பெற்றிருக்கலாம். அதில் எந்தப் பிரச்னையும் அல்ல; ஆனால், அதற்குப் பிறகு கிரெடிட் கார்டு தொடர்பான வட்டி விவரங்களையும், கட்டணங்களையும் சரியாக கவனிக்கிறீர்களா? இதில்தான் பலரும் தவறு செய்கின்றனர் அல்லது ஏமாறுகின்றனர். இதுகுறித்து இன்றைய The Salary Account எடிஷனில் வழிகாட்டுகிறார் Shree Consultants தளத்தின் நிறுவனர் கிஷோர் சுப்ரமணியன்.

-The Salary Account.

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Salary Account | Hello VikatanBy Hello Vikatan