Kovai Review of Books

கிறித்தவமும் சாதியும் - சாதிகள் இருக்குதடி பாப்பா


Listen Later

கிறித்தவமும் சாதியும் 

கத்தோலிக்க ஆலயத்தில் நிலவிய சமத்துவம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஈர்க்கும் கவர்ச்சியான சக்தியாக விளங்கியது. அதே நேரத்தில் உயர் சாதியினர் அல்லது அவர்களை அடுத்திருந்த ஆதிக்க சக்தியாக விளங்கிய சாதியினர் கத்தோலிக்கர்களாக  இருந்த  பகுதியில் சற்று மாறுதலான நிலை நிலவியது. இப்பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏனைய கத்தோலிக்கர்களுக்குச் சமமான நிலையைத் தேவாலயத்தில் பெறமுடியவில்லை. தமிழகத்தின் பாரம்பரியமான சாதி வேறுபாடுகள் ஓரளவுக்கு இங்கும் நுழைந்துவிட்டன. இதன் விளைவாகச் சாதிகளுக்கென்று தனித்தனி தேவாலயங்கள் சில பகுதிகளில் உருவாக்கப்பட்டன. அல்லது சாதிய வேறுபாடுகளுடன் கூடிய ஆலயங்கள் வடிவமைக்கப்பட்டன. இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனிப்பகுதி அமைக்கப்பட்டது. எனவே இந்து ஆலயங்களில் கோவில் நுழைவுப் போராட்டம் அவசியமானது போலக் கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் சமத்துவம் வேண்டும் போராட்டம் அவசியமாயிற்று. (from commonfolks.com)

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kovai Review of BooksBy Kovai Review of Books