✍️😍✍️😍✍️😍✍️😍✍️😍✍️கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
படம்: ஆலயமணி
பாடியவர்கள்: L.R.ஈஸ்வரி, T.M.சௌந்தராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.
🎶🎤🎶🎤🎶🎤🎶🎤🎶🎤🎶🎤🎶ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே...