Sign up to save your podcasts
Or
* கவர்னரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, கவர்னர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? - அண்ணாமலை
* முதுகலை மருத்துவப்படிப்பில், மூன்றாம் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீடு மூலம் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தெலங்கானாவை சேர்ந்த ரூத் ஜான் கொய்யாலா. .
* நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3-ன் ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
* சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக நடத்திய நீட் தேர்வு போராட்டம் நாடகம் என எதிர்க்கட்சித்தலைவர் கூறியது குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது; "நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே.
* கோடநாடு வழக்கு குறித்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- எனது தம்பி கனகராஜ் கோடநாடு சம்பவத்தில் ஈடுபட்டு திரும்பிய நேரத்தில், பெருந்துறையில் வைத்து சந்தித்தேன். கோடநாடு பங்களாவில் இருந்து, 5 பெரிய பைகளை ஈபிஎஸ் கூறியதன் பெயரில் எடுத்து வந்ததாக கூறினார். அதில் ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய நிலையில் தான், ஆத்தூரில் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை. வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது. டி முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உரியப் பாதுகாப்பு முதல்-அமைச்சர் கொடுப்பார் என்று நம்புகிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* கோவை ஈஷா யோகா ஃபவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டுவதற்காக முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* ஓமந்தூரார் மருத்துவமனையானது தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* முஸ்லீம் மாணவியைப் புறக்கணித்த குஜராத் பள்ளி.
-Solratha Sollitom.