எழுநா

கறுப்பு அன்னம் | சமனற்ற நீதி - அமெரிக்க நீதித்துறையின் சதியும் சமனற்ற போக்கும் | ராஜ் ராஜரட்ணம்


Listen Later

ராஜ் ராஜரட்ணம், சட்டத்துக்கு முரணாக ‘உட்தகவல் வணிகம்’ (Inside Trading) செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்கப் புலனாய்வுப் பணியகத்தால் 2009 ஒக்டோபரில் கைது செய்யப்பட்டார். அக் குற்றச்சாட்டுப் பொய்யானது என வாதாடியும், நீதிமன்றம் அவருக்கு 11 வருடங்கள் சிறைத்தண்டனையும் அமெரிக்க வரலாற்றிலே உச்சபட்சமான அபராதத் தொகையும் விதித்தது. ராஜ் ராஜரட்ணம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார்; தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக் கெதிராகப் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இந் நிலையில், சிறையிலிருந்தவாறே அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலே ‘Uneven Justice’. இந்நூல் அமெரிக்க நீதித்துறை மீதும், நீதிபதிகள்  மீதும், அமெரிக்க வழக்குரைஞர் நாயகத்தின் மீதும், எப்.பி.ஐ. மீதும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் அண்மையில் ஓய்வுநிலைப் பேராயர் பேரருட்கலாநிதி எஸ். ஜெபநேசன், முனைவர் சோ. பத்மநாதன் (சோ.ப) ஆகியோரால் ‘சமனற்ற நீதி’ எனும் பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மன்றத்தினால்’ வெளியிடப்பட்டது. தமிழ் வாசகர்கள் அறியும் நோக்கில் இந் நூல் ‘சமனற்ற நீதி – அமெரிக்க நீதித்துறையின் சதியும் சமனற்ற போக்கும்‘ எனும் பெயரில் எழுநாவில் தொடராக வெளிவருகிறது.


...more
View all episodesView all episodes
Download on the App Store

எழுநாBy Ezhuna