Love Gold Journey

Lockdown april month


Listen Later

Lockdown April மாதம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை.
சுமார் இரவு 9மணிக்கு நண்பரின் போன்.
தன் மகனுக்கு bike accident. உடனே surgery செய்ய வேண்டும். A one negative மூன்று Blood unit உடனே வேண்டும்.Rare group.
Hospital ல் இல்லை. Corona period Lock down ஆக இருப்பதால் Blood bankலும் stock கிடைக்கவில்லை. ஏற்பாடு செய்து தர முடியுமா? என்று அழுது கொண்டே கேட்டார்.
Lockdownல் எப்படி accident?
அடுத்த தெருவில் இருக்கும் Medical shop க்கு எனக்கும் மனைவிக்கும் மருந்து வாங்க சென்றான்.Skid ஆகி விழுந்ததில் தலையில் அடிபட்டு நிறைய ரத்த சேதாரம்." என்றார் விம்மியபடியே சொன்னார்.
பொறு. அமைதியாக இரு. ஏதாவது செய்யலாம் என்று ஆறுதல் சொல்லிவிட்டு என்ன செய்வது என்று பதட்டமாய் யோசித்தேன்.
மகாதேவன் நண்பரின் நினைவு வந்தது. Company executive. தன்னால் முடிந்ததை உடனே செய்வார். அவரை கூப்பிட்டு விஷயம் சொன்னேன்.
எந்த Hospitial, address எல்லாம் விவரமாக கேட்டு விட்டு, நான் கூப்பிடுகிறேன் என்று போனை வைத்தார்.
எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அந்த Group இல்லை.
பல இடங்களுக்கு போன் செய்தோம்.
பலரிடம் கூறினோம்.
சோர்ந்து போய் இருந்த போது
ஒரு Phone Call.
நான் ஜோஸப்.ராகவாச்சாரி சார் (என் நண்பர்) விஷயத்தை கூறி உங்கள் போன் நெம்பர்கொடுத்தார்.எனக்கு அந்த group தான். Hospital செல்கிறேன். உங்கள் நண்பரிடம் சொல்லிவிடுங்கள். 20 நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்றார் .
அவருக்கு நன்றி கூறினேன்.
இன்னும் இரண்டு unit வேண்டும்.
மகாதேவன் போன் செய்தார். Blood bank ஒன்றில் ஒரு unit இருக்கிறது. பேசி விட்டேன்.என் பெயரை சொல்லுங்கள். தெரிந்தவர்தான். கொடுத்து விடுவார்.
அவருக்கு நன்றி கூறினேன். இன்னும் ஒரே ஒரு unit வேண்டும்
அதிர்ஷ்டவசமாக என் நண்பர் பாஷா வேறொரு விஷயமாக போன் செய்தார்.
நான் பதட்டத்தோடு விஷயத்தை கூற,
Dont worry என் மனைவிக்கு அதே குருப்தான். உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள். அரை மணி நேரத்தில்
அங்கு இருப்போம்" என்றார்.
அது போக,போகும் வழியில்தான் நீங்கள் சொல்லும் Blood Bank. நானே அதையும் வாங்கி கொண்டு வருகிறேன் என்று உங்கள் நண்பருக்கு சொல்லிவிடுங்கள்" என்றார்.
நண்பரிடம் நேரில் போய் சொல்லியாச்சு. ஒரு மணி நேரத்தில் 3 unit blood சேர்ந்து விட்டது.
ஆப்பரேஷன் நல்லபடியாக முடிந்தது. Patientம் நலம்.
நானும் நண்பரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
ஆபரேஷன் முடியும் வரை பாஷாவும், ஜோசப்பும் கூட இருந்தார்கள்.மிகவும் ஆறுதலாக இருந்தது.
பாஷாவின் மனைவி அந்த பதட்டத்திலும் Flask ல் டீயும்,Bread and biscuit கொண்டுவந்திருந்தார்.
நண்பரையும் மனைவியையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தார். அவர்கள் பதட்டத்தில் எதுவுமே சாப்பிடாமல் சோர்ந்து போய் இருந்தார்கள்.
எங்களுக்கும் டீகொடுத்தார்.
Receptionல் எல்லோரும் அமர்ந்திருந்தபோது யோசித்தேன்.
மகாதேவன், ராகவாச்சாரி, ஜோஸப், பாஷா இவர்களுக்கும் என் நண்பருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்,
ஓடோடி வந்து இக்கட்டான நேரத்தில் கைகோர்த்திருக்கிறார்கள்.
என்ன ஒரு திருவிளையாடல்.
கடவுள் யார்?
ஆபத்தில் இருக்கும் போது உதவுபவர்கள் எல்லாமே கடவுள்தான்.
கடவுளின் மொழி அன்புதான்.
கருணை என்பது எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கருணையோடு மற்றவர்க்கு உதவுவதுதான்.
அன்பும் கருணையும் கொண்ட எல்லோருமே கடவுள்தான் என்று மனப்பூர்வமாக அன்று
தெரிந்து கொண்டேன்.
மனித நேயத்திற்கு முன்
மதமாவது ஜாதியாவது.
ஆத்திகம் பேசும் அன்பருக்கு
எல்லாம் சிவமே அன்பாகும்.
நாத்திகம் பேசும் அன்பருக்கு
எல்லாம் அன்பே சிவமாகும்.
சத்தியமான வார்த்தைகள்
என்னை பொறுத்தவரை.
நன்றி :-R. S. Manoharan
...more
View all episodesView all episodes
Download on the App Store

Love Gold JourneyBy RUPI KURTHI COLLECTION