Kathai Solli

லட்சம் பறவைகள் - 41வது கதை


Listen Later

லட்சம் பறவைகள்

ராஜா ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கதை கேட்பது ரொம்ப பிடிக்கும். நாட்டு மக்கள் அவர்கிட்ட தினமும் புதுசு புதுசா கதை சொல்லிகிட்டே இருப்பாங்க. ராஜா அவங்ககிட்ட அப்புறம் என்னாச்சு? கதை அவ்ளோதானா? வேற கதை சொல்லுங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாரு! யாராலையும்  மன்னரின்  கதைப்பசிக்கு தீனி போட முடியல. அரசருக்கு நாட்டுல  கதை சொல்றவங்க குறைஞ்சிட்டாங்களோன்னு எண்ணம் வந்துருச்சி! அதனால ஒரு அறிவிப்பு வெளியிட்டார். யார் வேணுமுனாலும் ராஜாகிட்ட வந்து  கதை சொல்லலாம். ராஜா எப்போ போதும் , கதை சொல்றது நிறுத்துன்னு சொல்றாரோ அதுவரைக்கும் அவங்க விடாம  கதை சொல்லணும். அப்படி  கதை சொல்றவங்களுக்கு 1000 தங்க நாணயங்களை வெகுமதி தர்றதா அறிவிச்சார் ராஜா. பல பேர் மன்னர்க்கிட்ட  கதை சொன்னாங்க ஆனா யார்கிட்டயும் ராஜா  கதை சொல்றது போதும்ன்னு சொல்லவேயில்லை. இன்னும் சொல்லு !  அடுத்தது என்ன? ன்னு கேட்டுகிட்டே இருந்தாரு !  கதை சொல்றவங்களோட முயற்சி தோல்வியிலதான் முடிஞ்சது. ஒரு நாள் காலையில ஒரு விவசாயி  ராஜாகிட்ட வந்து மன்னர் தன்னை நிறுத்துன்னு சொல்றவரைக்கும் நான் ஒரு  கதை சொல்வேன்னு சொன்னார். மன்னரும் சரின்னு சொல்லிட்டு  கதை கேட்க உட்கார்ந்தார். விவசாயி  கதை சொல்ல ஆரம்பிச்சார். ஒரு காலத்துல ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான். அவன்கிட்ட ஒரு பெரிய வலை இருந்தது. அவன் ஒரு பெரிய காட்டுக்குப் போயி அந்த வலையை விரிச்சான். மதியத்துலயே லட்சக்கணக்கான பறவைகள் அவன் விரிச்ச வலையில சிக்கிருச்சி. ஆனா அதிர்ஷ்டவசமா அந்த வலையில ஒரு சின்ன துளை இருந்தது. சிறகடிச்சு முதல் பறவை தப்பிச்சிருச்சு. அப்புறம் என்னாச்சு ?  கேட்டார் ராஜா.  சிறகடிச்சு இரண்டாவது பறவை தப்பிச்சிருச்சி ! பிறகு ? ன்னு கேட்டார் அரசர்.  சிறகடிச்சு மற்றொரு பறவை பறந்து சென்றதுன்னாரு விவசாயி ! இப்படியே விவசாயி கதையை தொடர்ந்தார். ராஜா கேட்டுகிட்டே இருந்தாரு! விவசாயியும் மற்றொரு பறவை பறந்ததுன்னு சொல்லிகிட்டே இருந்தாரு ! லட்சம் பறவைகள் பறக்கிற வரைக்கும் விவசாயி இப்படியே தான் சொல்லிகிட்டே இருப்பாருன்னு புரிஞ்சிருச்சி மன்னருக்கு. இறுதியா ராஜா விவசாயியை கதை சொல்றது நிறுத்துன்னு சொல்லி 1000 தங்க நாணயங்கள் பரிசா கொடுத்தார். மன்னர் அப்புறம் ஒருபோதும் இந்த மாதிரி சவாலை முன்வெக்கல !

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kathai SolliBy Kathai Solli

  • 5
  • 5
  • 5
  • 5
  • 5

5

1 ratings