Saiva Siddhanta

Mapadiyam - Muthal Nootpaa


Listen Later

முதல் சூத்திரம்

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்பது சூத்திரம்.

வார்த்திகப் பொழிப்பு

கருத்துரை : என் நுதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

உரைவகை : இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க.

1. முதல் அதிகரணம்

மேற்கோள் : ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்துஎன்றது.

ஏது : தோற்றமும் ஈறும் உள்ளதின்பாலே கிடத்தலின்

உதாரணம் :

பூதாதி ஈறும் முதலும் துணையாக

பேதாய்! திதி ஆகும் பெற்றிமையின் - ஓதாரோ
ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இறக்கண்டும்
அன்றுஎன்றும் உண்டு என்ன ஆய்ந்து 1

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu