Solratha sollitom| Hello Vikatan

மணிப்பூர் : மம்தா முதல் கனிமொழி வரை பற்றி எரியும் எதிர்ப்பு! | Solratha Sollitom-21/07/2023


Listen Later

* மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

* மணிப்பூர் கொடூரம் தொடர்பாக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

* ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையேயான இந்த வன்முறை நிறுத்தப்பட்டு, இருவரும் பேச முன்வர, அங்கே நடுநிலையான அமைப்பு தேவைப்படுகிறது. அதனால்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

* மம்தா பானர்ஜி கூறியதாவது: எங்கள் மகள்களை காப்பாற்றுங்கள்' என்ற கோஷத்தை நீங்கள்தான் (பா.ஜ.,) கொடுத்தீர்கள். இப்போது உங்கள் கோஷம் எங்கே போனது?. இன்று மணிப்பூர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எரிகிறது. பில்கிஸ் பானு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். மல்யுத்த வீராங்கனை வழக்கில் பிரிஜ் பூஷன் சிங் ஜாமினும் பெற்றுள்ளார். வரும் தேர்தலில் இந்த நாட்டு பெண்கள் உங்களை அரசியலில் இருந்து தூக்கி எறிவார்கள்.

* "பா.ஜ.க கூட்டணியை முறிக்கும்வரை தொடர்வோம்" - ஓ.பன்னீர்செல்வம்

* செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன், வழக்கின் விசாரணையை வரும் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வரை நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

* உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன் விராட், வீரேந்திர ஸ்வரூப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 19ஆம் தேதி பள்ளி மாணவர்கள் ஸ்பைடர்மேன் குறித்து உரையாடி உள்ளனர். ஸ்பைடர்மேனின் உரையாடலைக் கேட்ட விராட் பால்கனிக்கு வந்து ' நான் ஸ்பைடர்மேன் வருகிறேன்' என்று கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த விராட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். Also இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மாணவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கடந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வருவாய்த்துறை அமைச்சராக சாத்தூர் ராமச்சந்திரன் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சுகாதாரம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இருந்தார். அப்போது, அவரும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, தொழில் அதிபர் சண்முக மூர்த்தி ஆகிய 3 பேரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 11 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது இந்த சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்ககோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் ஏற்கனவே கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் நேற்று தீர்ப்பு கூறினார். சொத்து குவிப்பு குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லாததால் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, சண்முகமூர்த்தி ஆகிய 3 பேரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

* ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28 சதவீதம் வரி போட்டு வாங்குவது பாவப்பட்ட பணம் என்றும், மக்களை கொல்லும் விளையாட்டே வேண்டாம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே சட்டத்தை முந்தைய அ.தி.மு.க. அரசு இயற்றியபோதும் அதுபற்றி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி ஐகோர்ட்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி அந்த வழக்கில் மத்திய அரசு அப்போது முறையீடு செய்யவில்லை. ஆனால் இப்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதிட்டு, இதே விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளைத்தான் கொண்டு வந்துள்ளதே தவிர இதற்கென்று தனி சட்டத்தை மத்திய அரசு இயற்றவில்லை. அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் வகையில் அது உள்ளது. அது மக்களுக்கு பாதுகாப்பான விதிகளாக இல்லை. சூதாட்டம் ஒரு கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால் 40-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்த பின்னரும் அதை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் விளையாட்டு மூலம் வருவாய் ஏற்படும் வகையில் விதிகளை திருத்திவிட்டு, சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நோயை தடுக்காமல் அதை பரப்புகின்றனர். விளையாட்டில் வித்தியாசம் அரசியல் அமைப்பு சாசனத்தில் பொதுப்பட்டியல், மத்திய அரசு பட்டியல் மற்றும் மாநில அரசுப் பட்டியல் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுப் பட்டியலில் சூதாட்ட விளையாட்டு இடம் பெற்றுள்ளதால்தான் மாநில அரசு தனது உரிமையுடன் அதில் சட்டம் இயற்றியுள்ளது. 'ரம்மி' விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அது மக்கள் நேரடியாக உட்கார்ந்து ஆடும் ரம்மி விளையாட்டு ஆகும். தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3-வதாக 'புரோகிராமர்' என்ற மற்றொருவர் புகுந்து அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் என்னதான் திறமையுடன் விளையாடினாலும், இறுதியில் புரோகிராமர் புகுத்தி வைத்துள்ள முடிவுதான் ஜெயிக்கும். இதனால்தான் பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று பணத்தை இழக்கின்றனர். எனவே 2 வகை ரம்மி விளையாட்டிலும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும். மாறுபட்ட கருத்து ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு போடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டே வேண்டாம், பாவப்பட்ட பணம் தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. தெலுங்கானா உள்பட 2 மாநிலங்களில் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறுகிறார். ஆனால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதிடுகிறார். மத்திய அரசு என்பது மாறுபட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவமாக உள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு சார்பில் தமிழக கவர்னருக்கு எழுதிய பதில் கடிதம் அப்படியே இருக்கிறது. அவரிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


-Solratha Sollitom

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan