Solratha sollitom| Hello Vikatan

மோடி - அடுத்து என்ன? | Solratha Sollitom- 20/07/2023


Listen Later

* ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்'': திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு: ...

* மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை

* இந்த ஈவுஇரக்கமற்ற கொடூரச் சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 

* மணிப்பூர் கலவரத்தின் போது 2 பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளது. 

* மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என அம்மாநில முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார். 

* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவையின் மைய பகுதியில் வந்து கோஷமும் எழுப்பின. இதனால் மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. 

* மோடி : மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம். குற்றறவாளிகள் தப்ப முடியாது" 

* மணிப்பூர் தொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

* பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

* குமரி மாவட்டம் மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ் (வயது 47), நாகா்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 18 பயணிகள் இருந்தனர். ஆனால் அவர் ஓட்டிச் சென்ற பஸ் மிகவும் பழுதான பஸ் என்று கூறப்படுகிறது. பஸ்சில் சரிவர பிரேக் பிடிக்கவில்லையாம். மேலும் பஸ்சை இயக்கும் போது வலது புறமாக இழுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதனால் டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் பயணிகளின் நலன்கருதி தொடர்ந்து இயக்காமல் பஸ்சை நடுவழியில் நிறுத்தி விட்டு பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். இதைத் தொடர்ந்து பழுதான அரசு பஸ்சை சரி செய்வதற்காக வள்ளியூரில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பஸ் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டதுஆனால் தொடர்ந்து இயக்கிய போதும் பஸ் சரிவர இயங்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் பஸ்சை பணிமனைக்கு கொண்டு செல்லாமல், விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் பஸ்சை ஒப்படைத்து விட்டு நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி கொடுத்தார். இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை ஆய்வு செய்தனர். அப்போது பஸ்சில் பிரேக் சரிவர வேலை செய்யாதது தெரியவந்தது. இதற்கிடையே அரசு பஸ்சை டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் திடீரென பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் பஸ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்ததால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* சென்னை, சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் பழம் விற்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணை, மர்ம நபர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் வெட்டியுள்ளார். ராஜேஸ்வரி ரெயில் இருந்து இறங்கி நடந்து வந்த போது அதே ரெயிலில் வந்த அடையாளம் தெரியாத நபர் இந்த தாக்குதல் நடத்தியுள்ளார். ராஜேஸ்வரியைக் கத்தியால் வெட்டி விட்டு அதே ரெயிலில் ஏறி அந்த நபர் தப்பிச்சென்றார். படுகாயமடைந்த பெண் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.

* ஜூலை 28ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் நடக்கவிருக்கும் ”என் மண் என் மக்கள்” நடை பயணத்தின் போது மக்களின் புகார்களை பெறுவதற்காக 'விடியல முடியல' புகார் பெட்டி திறப்பு

-Solratha Sollitom

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan