நாம் தேவனைப் பார்த்து அவர் என் தேவன் நான் அவருடைய பிள்ளை என்று சொல்லுவதை பார்க்கிலும், அந்த தேவனே நம்மை பார்த்து நான் உன்னுடைய தேவன் நீ என்னுடைய பிள்ளை என்று சொல்லுவது எவ்வளவு பாக்கியமான விஷயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைய முடியாத, பெற முடியாத எந்த ஒரு விருப்பத்தையும், ஆஸ்தியவையும் உயரத்தையும் விட தேவனே பெரியவர், ஈடு இணை அற்றவர், மற்றும் நமக்குத் தேவையான அனைத்தும் அவரிடத்தில் உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும்