Solratha sollitom| Hello Vikatan

நாடாளுமன்றம் வந்த ராகுல் - எப்படி எதிர்கொள்வார் மோடி? | Solratha Sollitom-07/08/2023


Listen Later

* புரட்சிகரப் பாடகர் கத்தார் மரணம்

* 137 நாட்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்தார் ராகுல்...

* செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி...

* தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

* 30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். 

* மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க மாவட்ட வாரியாக சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கூறியுள்ளார். 

* 'என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். ₹25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது. தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* For Birthday wishes : [email protected], [email protected]


-Solratha Sollitom

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan