திருமறைக்காட்டில் திருப்பதிகங்களால் திருக்கதவம் நீக்கி சிவதொண்டில் மெய்மறக்கிறார்கள் அப்பரும் சம்பந்தரும். பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க சம்பந்தர் செல்ல, வடதளியில் சமணர்களால் மறைக்கப்பட்ட எம்பெருமான் அப்பரின் வைராக்கியத்தால் சோழ மன்னனால் மீட்கப்படுகிறார். தொடர்ந்து சோழ நாட்டு திருத்தலங்கள், தொண்டை நாடு, காஞ்சி என திருக்காளத்தி, ஸ்ரீ சைலம் வரை பரமனை பாடியவண்ணமே சிவனில் உறைகிறார் அப்பரடிகள்