ஸ்ரீ சைல தரிசனத்திற்கு பிறகு காசி விஸ்வநாதரை பாடிப் பரவும் அப்பர் பெருமான் கயிலை நாதனின் திருக்காட்சிக்காக ஏங்கி உடல் நீக்கும் அளவிற்கு கயிலை பயணம் மேற்கொண்டு சிவநேசராய் திருவையாற்று பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து பாண்டிய நாட்டிலிருந்து மீளும் சம்பந்தரோடு உறவாடுகிறார். தாமும் பாண்டியநாட்டு பயணம் மேற்கொண்டு பரமனை பல தலங்களில் பணிந்து திருப்புகலூரில் எம்பெருமானோடு சிவானந்த சோதியில் ஐக்கியமாகிறார்.