தான் கொண்ட இறைபக்தி, கணவரே வேறுபட்டு நிற்க காரணமாக, இளமைக் கோலத்தால் பயன் யாது, ஈசனே எல்லாம் எனும் போது பேயுருவும் நல்லுருவே என இல்லற விளக்காகவும், இறை நேசச் செல்வியாகவும் வாழ்ந்து ஈசனுக்கே தாயான அம்மை பாதம் போற்றி போற்றி! சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவழைத்து சைவம் திளைக்க சேவை செய்த குலச்சிறையார், சுந்தரரின் தொண்டராய் அடியார் தொண்டில் சிறந்த பெருமிழலைக் குறும்ப நாயனார் ஆகியோரின் திருவாழ்வும் இப்பகுதியில்!