பாண்டியனின் நோய் தீர்த்த சம்பந்தர் சமணர்களின் புனல்வாத அழைப்பை ஏற்று ஐந்து எழுத்து மந்திரத்தின் மகிமையை உணர்த்துகிறார். சமணம் வீழ்ந்து சைவம் ஓங்கியது. பௌத்தர்களையும் வாதத்தில் வீழ்த்துகிறார். சோழ நாடு தொண்டை நாடு என சம்பந்தரின் திருத்தொண்டு பரவுகிறது. மண வாழ்க்கையில சிறிதும் நாட்டமில்லாது சிவனில் ஐக்கியம் பெறுவதே உத்தமம் என எண்ணுகிறார். பிள்ளையார் மனம் அறிந்த பெருமான் மணக்கோலத்திலேயே பிள்ளையையும், அவரைச் சார்ந்தோரையும் தடுத்தாட்கொள்கிறார்.