ஆரூரில் சுந்தரருக்கும், பரவையாருக்கும் மணக்கோலம் கூட்டுவித்து ஆட்டுவிக்கும் எம்பெருமான், அடியவர் பெருவாழ்வை திருதொண்டந்தொகையாக படைக்க ஆணையிடுகிறார். ஊர்தோறும் அரன் புகழ் பாடி தொழும் சுந்தரர்,முதுகுன்றூர் - விருத்தாசல மணிமுத்தாற்றில் ஐயன் தந்த பொற்காசுகளை வீசி, திருவாரூர் திருக்குளத்தில் பெற்றுக்கொள்ள்ளுமாறு அசரீரி ஒலிக்கிறது...