திருவாரூர் கமலாலய திருக்குளத்தில் பொன்னெடுப்பதை தடுத்து பரவையாரின் நகைப்புக்கு சுந்தரரை ஆளாக்குகிறார் ஆரூரார். ஊரெங்கும் ஈசனை வணங்கி பதிகங்கள் படைக்கும் சுந்தரர், சங்கிலியார் பொருட்டு இறைவனார் திட்டப்படி தொண்டை வள நாட்டு திருக்கோயில்களை தரிசித்து திருவொற்றியூர் நோக்கி செல்கிறார்