Harsha's Podcast

நம் நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் அன்னை ஆதிபராசக்தியின் நாமாவளி


Listen Later

நம் நியாயமான ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் அன்னை ஆதிபராசக்தியின் நாமாவளி

 #ஆதிபராசக்தி #பராசக்தி #நாமாவளி 

திருமூலர் அருளிய திருமந்திரம் 663  

பூரண சத்தி ஏழுமூன் றறையாக ஏரணி கன்னியர் எழுநூற்றஞ்f சாக்கினார் நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங் காரண மாகிக் கலந்து விரிந்ததே

  ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ

 23. சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம் ஸர்வ ஸம்பத்து     த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா  ஶரீரார்த்தம் ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்  யதேதத் த்வத்ரூபம் ஸகல மருணாபம் த்ரினயனம்  குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம்                                       23     எக்காரணத்தால் என்னுடைய இருதயத்தில் பிரகாசிக்கும் இந்த உன்னுடைய ரூபம் முழுவதும் சிவப்பான காந்தியுடனும் மூன்று கண்களுடனும் இரண்டு ஸ்தனங்களால் சற்று வளைந்தும் பிறைச்சந்திரனைச் சூடிய மகுடத்துடன் விளங்குகிறதோ, அதனால் சம்புவினுடைய சரீரத்தின் இடதுபாகம் உன்னால் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பும் முழுத் திருப்தியில்லாத மனத்தால் சரீரத்தின் மற்றொரு பாதியும் கவர்ந்து கொள்ளப்பட்டதென்று சந்தேகம் அடைகிறேன்.     சிவனும் சக்தியும் ஒரே உடலின் வலது பாகமும் இடது பாகமும். சிவனுடைய பாகம் வெளுப்பு, சக்தியின் பாகம் சிவப்பு. ஆனால் தேவியின் உடல்முழுதும் சிவப்பாகவே காணப்படுவதாலும், மூன்று கண்களும் கிரீடத்தில் சந்திர கலையும் தோன்றுவதாலும், பாதி உடலைக் கொண்டதில் திருப்தி அடையாமல் முழுவதையும் தன்மயமாகவே ஆக்கிக்கொண்டுவிட்டாள் என்று இங்கே கூறப்படுகிறது. சிவன் சக்தியியின் வடிவத்தில் மறைந்து போகிறான். இதனால் சக்தியைப் பூஜை செய்தால் சிவபூஜை செய்ததாகிறது. ‘உத்தரகௌலம்’ என்ற மதத்தில் தனியாகச் சிவபூஜை இல்லை. சக்தியிலேயே சிவன் ஐக்கியம்; அவனுக்குத் தனிவடிவமும் இல்லை, தொழிலும் இல்லை.   ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி 1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!  2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!  3.ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! 4. ஓம் ஸ்ரீ  ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!  5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!  6.ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ! 7.ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!  ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள்  அதிசயங்கள் பல நிகழ்த்தும்.  ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும்.... இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார  ஜெபம் செய்யுங்கள்..... மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள். இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்.... " உரு ஏற திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும்....நன்றி!!! இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள்....அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்... அன்னை லலிதையின் திருவடிகளே சரணம்!!! ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Harsha's PodcastBy Harshavarthan