வானொலிக் கல்வி - கோவை

NMMS- தேர்வு - மாணவர்களுக்காக ஒரு குரல்


Listen Later

NMMS
இதற்குத் தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ் NMMS- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 
நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 
https://dge1.tn.gov.in
திருமதி. ரமணி, விரிவுரையாளர், கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ,திண்டுக்கல் மாவட்டம்.
...more
View all episodesView all episodes
Download on the App Store

வானொலிக் கல்வி - கோவைBy FineArts n Tips