சிறுவயது முதலே முறைப்பெண், மாமன் எனக் கூவி, இளம் நெஞ்சில் ஆசை வளர்த்து, பின் ஜாதகக் காரணம் காட்டி பிரிப்பது பெரியவர்களின் மிகப்பெரும் குற்றம் என்று நிறுத்தாமல், பிராப்தம் என்று அந்த வஞ்சகத்திற்கு நியாயம் கற்பிப்பதா என்று சாடுகிறார் ஆசிரியர். இள மன ஓட்டங்களை மிக நுட்பமாக 1940களிலேயே சிறுகதை வடிவில் விவரித்த ஆசிரியரின் எழுத்து வன்மை மிகச் சிறப்பு...