வாழ்க்கையில் நாம் அறிந்தும் அறியாமலும் பல தவறுகள் செய்கிறோம். ஒரே தவறைக் கூட மறுபடியும் செய்த அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. இனிமேல் அப்படி நடந்தால் உங்களை நொந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் நாம் எடுக்கும் பல முக்கிய முடிவுகளில் நாம் பங்காற்றுவது மிகக் குறைவு. பெரும்பாலான நேரங்களில் திரைமறைவில் நம் மூளை ஓர் ஓரங்க நாடகம் நடத்துகிறது. இதைப் பற்றி டேவிட் ஈகிள்மேன் விரிவாக எழுதியுள்ள "இன்காக்னிட்டோ" என்ற புத்தகம் இந்த வார புத்தகப் பறவையில் இடம் பெற்றுள்ளது. கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.