"ஏகாக்ரமான காதலுக்கும் இன்பத்திற்கும் வாழ்க்கையில் இடம் இல்லையா? ஏகாக்ரமாக துஷ்யந்தனைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்து உலகத்தையே மறந்ததால்தான் சகுந்தலைக்கு துர்வாசரின் சாபம் கிடைத்தது; பின் துக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. பின்னே ஏன் சேற்றிலிருந்து கிளம்புவதுபோல், வாழ்க்கையிலிருந்து காதல் கிளம்புகிறது? இல்லை. காதலை வாழ்க்கையின் லட்சியமாக வைத்ததால்தான் சிதைவு ஏற்படுகிறது. காதல் வெறும் தன்னலம்தான் என்பதாலா?"