Solratha sollitom| Hello Vikatan

ராகுலுக்கும் ரவீந்திரநாத்துக்கும் கிடைத்த வெற்றி! | Solratha Sollitom-04/08/2023


Listen Later

* நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உரத்த குரலில் பேசியதை நான் கேட்டேன். அவருக்கு பாராளுமன்றம் பற்றிய கவலை இல்லை. அவருடைய கவலை எல்லாம் "என் மண் என் மக்கள்" நடைபயணம் உண்டான பயத்தால் அவர் கூக்குரல் இடுகிறார்..

- நாடாளுமன்றத்தில் அமித்ஷா

* பார்லிமென்டில் கோஷம் எழுப்பிய எம்.பி.,க்களை எச்சரித்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, "அமைதியாக இருங்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்றார்.

* ராகுலுக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

* தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 

* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

* எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர்வைப்பதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொது நல மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

* எதிர்க்கட்சி கூட்டணியை ‛திமிர்க் கூட்டணி' என அழையுங்கள்: தன் கட்சி எம்.பி.க்களிடம் மோடி

* அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

* தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை - அன்புமணி

* For Birthday wishes ; [email protected], [email protected]


Credits :

Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan