SHANMUGATHIRUKUMARAN

SITTHAR SRI SOMAPPA SWAMIGAL MIRACLES, சித்தர் சோமப்பா சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்


Listen Later

மதுரை மாநகரம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஈசான்யத்தில் அமைந்த இடம் திரு கூடல்மலை இந்த மலையை காகபுசுண்டர் மலை என்திருப்பரங்குன்றத்தில் உள்ள திருக்கூடல்மலை.கூடல் மலை , தேவரும் மூவரும் , சித்தரும் முக்தரும் கூடும் மலை.

சித்தருக்குள் சிவனாய் விளங்கும் பலரும் தாமே விரும்பி இந்த மலைக்கு வந்து நடமாடி அமர்ந்து நிலை கொண்டுள்ளார்கள். திருக்கூடல்மலையின் பெருமையை அளவிட யாரால் இயலும் ?

திருக்கூடல் மலை தங்கமலையாய்த் தெரிகிறதென்று ஞானிகள் சொல்கிறார்கள்.  எண்ணற்ற ரகசியங்களைக் கொண்ட மலை .இம்மலையில் வாழும் விஷஜந்துக்களும்கூட ஒருதீங்கும் செய்வதில்லை.  பொதுவாக சித்தர்களின் இருப்பிடம், மலைகளாயிருக்கின்றன. ஏனெனில் அங்குள்ள மரம்செடி கொடிகள், அவர்களின் தவத்திற்கும் பிணி போக்கும் தொண்டிற்கும் துணை செய்கின்றன, ஆனால் இங்கு இம்மலையே அனைத்து பிணி அகற்றும் ஆலயமாய் விளங்குகிறது.


பலப்பல ஜென்மங்களாய் செய்த புண்ணிய பலனே  ஒருவரை இம்மலைக்குக் கொண்டு சேர்க்கிறது. வந்தவர் யாவரும் தங்கள் உடல்பிணி, மனப்பிணி , வறுமை இவைநீங்குவதை சந்தேகமின்றி உணர்ந்து போற்றி மீண்டும்மீண்டும் வருகின்றனர்.

இந்தத் திருக்கூடல் மலையினை ஞானியும் சித்தருமாகிய தவத்திரு கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் தன் இருப்பிடமாகக்கொண்டு அருட்பணியாற்றினார்.

அந்த வேளையில் தான் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகமாய் விளங்கும் எல்லாம்வல்ல பரம்பொருள் நம்மிடம் கொண்ட தனிப்பெருங்கருணையின் காரணமாக தன் அலகிலாத  திருவிளையாடல்களை நடத்தி

நம் பிணிகளைத் தீர்க்க தெய்வத்தின் தெய்வமாய் ஞானிக்கும் ஞானியாய் சித்தருக்கெல்லாம் சித்தராய் விளங்கும் ஈசன் அருளால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த  சோமப்பா அவர்கள் 1920களில் இக்கூடல் மலை அடிவாரத்தில் தம் திருப்பொற் பாதம் பதித்தார்.அவர் நிகழ்த்திய அற்புதங்களை விவரிக்கிறார் டாக்டர். சண்முகதிருக்குமரன் ...

...more
View all episodesView all episodes
Download on the App Store

SHANMUGATHIRUKUMARANBy SHANMUGATHIRUKUMARAN