
Sign up to save your podcasts
Or


இங்ஙனம் சில ஆண்டுகள் சுசீந்திரத்தில் தங்கியிருந்த தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலிய அடியவர்களையும் உடனழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குப் பயணமானார். வழியில் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வரும் வழியில் தம் ஆசிரியர் ஆணைப்படி செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம் என்னும் துதிநூலினைப் பாடினார். இதுவே அவர் பாடிய முதல் நூல். பின்னர் தேசிகர் கொங்கு நாட்டுத் திருப்பேரூரினை அடைந்தா். அத்தலத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதினக்கிளை மடத்தில் தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலியவர்களுடன் சிலகாலம் தங்கியிருந்து பச்சைநாயகியுடனமர் பட்டிப்பெருமானையும், அகிலாண்டநாயகியுடனமர் அரசம்பலவாணப் பெருமானையும் வெள்ளியம்பலத்தில் சிவகாமியம்மையுடனமர் நடராசப் பெருமானையும் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
By suresh babuஇங்ஙனம் சில ஆண்டுகள் சுசீந்திரத்தில் தங்கியிருந்த தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலிய அடியவர்களையும் உடனழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குப் பயணமானார். வழியில் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வரும் வழியில் தம் ஆசிரியர் ஆணைப்படி செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம் என்னும் துதிநூலினைப் பாடினார். இதுவே அவர் பாடிய முதல் நூல். பின்னர் தேசிகர் கொங்கு நாட்டுத் திருப்பேரூரினை அடைந்தா். அத்தலத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதினக்கிளை மடத்தில் தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலியவர்களுடன் சிலகாலம் தங்கியிருந்து பச்சைநாயகியுடனமர் பட்டிப்பெருமானையும், அகிலாண்டநாயகியுடனமர் அரசம்பலவாணப் பெருமானையும் வெள்ளியம்பலத்தில் சிவகாமியம்மையுடனமர் நடராசப் பெருமானையும் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.