Sign up to save your podcasts
Or

குருவருளால் துறவு பூண்ட சுவாமிகள் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஒருமுறை திருநெல்வேலிக்கு அருகிலுள்ள இராசவல்லிபுரம் சென்றார் சுவாமிகள். அங்கு அருளும் அம்மையாகிய அகிலாண்டேசுவரி மீது பதிகம் பாடி அங்கேயே அரங்கேற்றினார். இதுவே இவர் எழுதிய முதல் நூலாகும்.
சுவாமிகளின் திருத்தலப் பயணங்கள்
ஒரு சமயம் சிவஞான முனிவர் திருப்பாதிரிபுலியூருக்குத் தல யாத்திரை சென்றார். அங்கு சில காலம் தங்கினார். அங்கு ஒருநாள் கோயிலின் முன் புலவர்கள் பேரவை ஒன்று கூடியது. அப்பேரவையில் செல்வந்தர் ஒருவர் நூறு பொன் கட்டிய பொன் முடிப்பை அவை முன்பு வைத்தார். ‘கரையேறவிட்ட முதல்வா உன்னை அன்றியுமோர் கதியுண்டாமோ?’ என்ற அடியை நான்காவது அடியாகக் கொண்டு ஒரு செய்யுள் இயற்றுபவருக்கு அப்பொன்முடிப்பு தரப்படும் என்று அறிவித்தார்.
By suresh babuகுருவருளால் துறவு பூண்ட சுவாமிகள் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வழிபாடு செய்யத் தொடங்கினார். ஒருமுறை திருநெல்வேலிக்கு அருகிலுள்ள இராசவல்லிபுரம் சென்றார் சுவாமிகள். அங்கு அருளும் அம்மையாகிய அகிலாண்டேசுவரி மீது பதிகம் பாடி அங்கேயே அரங்கேற்றினார். இதுவே இவர் எழுதிய முதல் நூலாகும்.