Saiva Siddhanta

Sivagnana Mapadiyam - Avathai


Listen Later

சிவஞான முனிவர்: திருவாவடுதுறை ஆதினத் தம்பிரானாகவும், வித்வானாகவும் விளங்கியவர் சிவஞான முனிவர். இலக்கியம், இலக்கணம், தருக்கம், சமயம் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார்.


இவற்றுள் சிறந்தது 'சிவஞானமாபாடியம்' ஆகும். மெய்கண்டாரின் சிவஞான போதத்துக்கு முனிவர் எழுதிய உரையாகும்.


சிவஞான முனிவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரம் ஆகும். திருநெல்வேலி மண்ணில் பிறந்து, தாமிரவருணி தண்ணீரைக் குடித்துப், பொதிய மலைத் தென்றலைச் சுவாசித்து வளர்ந்தவர் சிவஞான முனிவர். ஆனந்தக் கூத்தர் - மயிலம்மை தம்பதிகளுக்கு மகனாகச் சைவ வேளாளர் குலத்தில் 1753இல் பிறந்தார். இவரது இயற்பெயர் முக்களாலிங்கர். 1785இல் மறைந்த போது இவரது வயது 32 ஆண்டுகள் மட்டுமே. நடப்பு 2020 ஆண்டு அவர் முக்தி அடைந்த 235ஆவது ஆண்டாகும்.


ஒரு நாள் வீதி வழியே பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த திருவாவடுதுறை ஆதீனத்துத் தம்பிரான்கள் மற்றும் அடியார்களைப் பார்த்தவுடன் ஏதோவொரு இறையருள் ஈர்ப்பில் அவர்களைப்போல் ஆக வேண்டுமென முக்களாலிங்கர் தந்தையிடம் தெரிவித்தார். மகனைப் பிரிய மனமின்றி முதலில் பெற்றோர் தயங்கினாலும் இறைச்சித்தம் அவ்வாறிருப்பின் தடை சொல்வது முறையன்று என்று மனத்தைத் தேற்றிக் கொண்டனர். திருவாவடுதுறைத் தம்பிரான்களிடம் விவரத்தைக் கூறி அவர்களிடம் முக்களாலிங்கரை ஒப்படைத்து விட்டு விழிகளில் கண்ணீர் வழிய கனத்த இதயத்துடன் இல்லம் திரும்பினர்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Saiva SiddhantaBy suresh babu