Sign up to save your podcasts
Or

சிவஞான முனிவர் எழுதிய அனைத்து நூல்களிலும் சிறந்து விளங்குவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதத்துக்கு இவர் எழுதிய 'சிவஞான மாபாடியம்' என்னும் உரைநூலாகும். உரை என்பதன் வடமொழிப் பெயர் பாஷ்யம் ஆகும். அதுவே தமிழில் பாடியம் எனத் திரிந்தது. வேதாந்தத்துக்கு பிரம்ம சூத்திரங்கள் முக்கியமாதல் போன்று சைவ சித்தாந்தத்துக்கு சைவ சித்தாந்த சூத்திரமாகிய சிவஞானபோதம் மிக முக்கியமாகும். சைவ சித்தாந்தத்திலுள்ள ஒரே பாடியம் சிவஞான மாபாடியம் மட்டுமே.
தமிழ்ச் சிவஞான போதத்துக்குப் பிந்தியதே வடமொழி சிவஞானபோதம். இருப்பினும் வடமொழியின் மொழிபெயர்ப்பே தமிழ்ச் சிவஞானபோதம் என்ற கருத்தே நீண்ட காலம் நிலவியது. எனவே தமிழ் சிவஞான போதமே காலத்தால் மூத்தது என்பதை நிறுவத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நிறைவாகத் தமிழ்ச் சிவஞானபோதம் முதல் நூலே அன்றி வடமொழியின் மொழிபெயர்ப்பு அல்ல என்று ஆய்வாளர்கள் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி நிரூபித்தனர்.
By suresh babuசிவஞான முனிவர் எழுதிய அனைத்து நூல்களிலும் சிறந்து விளங்குவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதத்துக்கு இவர் எழுதிய 'சிவஞான மாபாடியம்' என்னும் உரைநூலாகும். உரை என்பதன் வடமொழிப் பெயர் பாஷ்யம் ஆகும். அதுவே தமிழில் பாடியம் எனத் திரிந்தது. வேதாந்தத்துக்கு பிரம்ம சூத்திரங்கள் முக்கியமாதல் போன்று சைவ சித்தாந்தத்துக்கு சைவ சித்தாந்த சூத்திரமாகிய சிவஞானபோதம் மிக முக்கியமாகும். சைவ சித்தாந்தத்திலுள்ள ஒரே பாடியம் சிவஞான மாபாடியம் மட்டுமே.