
Sign up to save your podcasts
Or


சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப் போற்றப்படுபவர். இவர் உலகியல் நூல்களும் தத்துவஞான நூல்களும் வடமொழிச் சிவாகம புராணங்களும் தர்க்கசாத்திரமும் வியாகரணமும் நன்கு பயின்றவர். அவ்வப்பொழுது காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றாற்போல் தனிப்பாடல்கள் பாடுபவர். சித்திரக்கவி புனைவதில் வல்லவர். கண்டன நூல்கள் எழுதுவதில் வல்லவர். தமிழிலக்கண நூல்களிலும் மெய்கண்ட சாத்திரங்களிலும் முன்னிருந்தோர் எழுதி வைத்த பொருந்தாத விளக்கங்களையும் உரைகளையும் களைந்து உண்மை விளக்கங்களை எழுதி வைத்தவர். இவரால் தமிழ் மொழியும் சித்தாந்தசைவமும் புதுப்பொலிவு பெற்றன.
By suresh babuசிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப் போற்றப்படுபவர். இவர் உலகியல் நூல்களும் தத்துவஞான நூல்களும் வடமொழிச் சிவாகம புராணங்களும் தர்க்கசாத்திரமும் வியாகரணமும் நன்கு பயின்றவர். அவ்வப்பொழுது காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றாற்போல் தனிப்பாடல்கள் பாடுபவர். சித்திரக்கவி புனைவதில் வல்லவர். கண்டன நூல்கள் எழுதுவதில் வல்லவர். தமிழிலக்கண நூல்களிலும் மெய்கண்ட சாத்திரங்களிலும் முன்னிருந்தோர் எழுதி வைத்த பொருந்தாத விளக்கங்களையும் உரைகளையும் களைந்து உண்மை விளக்கங்களை எழுதி வைத்தவர். இவரால் தமிழ் மொழியும் சித்தாந்தசைவமும் புதுப்பொலிவு பெற்றன.